அன்புத் தோழியே

உன் வருகையால்
வசந்தமானது என்
வாழ்நாட்கள்....

கார்மேகமாய்
தோல்விகள் என்னை
சூழ்ந்த போதும்
தெளிவானமாய் நின்று
வழிகாட்டியவள் நீ....

உன்னோடு உறவாடிய
தருணங்கள் இன்றுவரை
மீண்டும் கிடைக்காத
சந்தோஷ நிமிடங்கள்....

எருமை பண்ணி
லூசு பைத்தியம்
குரங்கு
உருபடவே மட்ட டா
உன்னை திருத்தவே முடியாது
என்று நீ திட்டிய வார்த்தைகளில்
ஒட்டிக்கொண்டுதான் இருந்தது
என் மீது நீ கொண்ட
உரிமையும் அக்கறையும்....

பலமுறை சொல்லிருபாய்
இதான் கடைசி
இனிமேல் தயவு செஞ்சு பேசாத
உனக்கும் எனக்கும்
எல்லாம் முடுஞ்சு போச்சு
நீ என் பிரண்ட் கிடையாது
எனக்காக நீ மாற வேண்டாம்
நான் யாரு உன்னை திருத்த
உன் விருப்பபடியே இரு என்று....

ஆனாலும் மறு நிமிடம்
என்னை மறைந்து நின்று
நோட்டமிடுவாய் நான்
பீல் பண்றேனா இல்லையா என்று
எப்படி சொல்ல தோழியே
உன்னை வெருபேத்தி
அழகு பார்பதிலும் ஒரு சுகம்தான்....

கல்லுரி இறுதிநாளில்
நீ அழுத அழுகையின்
அன்று புரியவில்லை
இன்று புரியும் தருணங்களில்
என்னருகில் நீ இல்லை....

இன்றுவரை தெரியவில்லை
உன்மீது கொண்டது
நட்பா.?. காதலா.?..

காதலால் நம் நட்பு
பிரிவதை விட
நட்பால் என் காதலை
மறைந்து வாழவே
விரும்புகிறேன்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (3-Nov-10, 8:10 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 710

மேலே