மூடநம்பிக்கை
மூடநம்பிக்கை !
= = = = = = =
பகையொன்றுமில்லையடா!
பசுவுக்கும் எனக்குமிங்கே.
பகுத்தறிய தெறியாதார்
உயர்திணை அஃறிணைக்கே.
உடல் உயிர் ஓம்பும் உணவினை
மனிதன் தவிர்த்து
ஊட்டுவதேன் மாட்டுக்கே?.
உட்கிடக்கை அறியீரோ !
கணம் பண்ணத் தவறியவர்
தந்தை தாய் தவிக்கவிட்டு.
கண்ணீர்விட்டழ கைவிட்டார்
கடைசியிலே.
கற்பணைய நட்பு நண்றி
மிக்கதொரு நாய் என்றே
காலைத்தோறுமே நடப்பார்
காவல் செய்தார் நாய்களுக்கே !
காக்கைக்கும் சோறிட்டார்
கடைத்தேறும் வழிஈதென்றே !
காக்கையே முற்பிதா எனப்
பொய்க்கதைகள் பல கூறி
காக்கையை வா கனமாக்கி.சனியை
வா காக வரவேற்றார் !
குளக்கரையில் நதிக்கரையில் குத்தவைத்து
பார்ப்பானை வயிறு குளிரும்படி உணவளித்தால்
பித்ரு குளிர்வான் பார்.
என்றான் பார்ப்பான்.
நம்வேதம் தனைஎடுத்து,
நகலொன்று தாணெடுத்து,
நாண்மறை ஈதென்றான்
நமக்கறிவு ஏதென்றான் !
சந்திரனை சாட்சி வைத்தே
சதிகள் பல செய்துவைத்தான்
சாத்திரத்தில் சூதுவைத்து
சாதிகள் பல வகுத்து வைத்தான் !
சூத்திரம் பல கற்றவனை
சாத்திரத்தில் கீழ்மையென்றான் !
சதுர்வர்ண சதி செய்து
நகரை விட்டே நகற்றி விட்டான் !
பேதமதையே சொல்லி
வடமொழி புணைக்கதைகள் பலசொல்லும்
வேதமே பெரிதாமென்று
வந்தேறி மாடோட்டிபார்ப்பான்,
மதயானையாய் குன்றேறி, கொடிநாட்டி, கடலுமதை விதவிதமாய் வெண்றவனை,
நாடு பிடிக்க நாடிப்பிடித்தான்.
வந்தோர்க்கு வாழ்வளித்து தமிழன்
உள்ளதெலாம் சேர்த்தளித்து
உணவளித்து உட்கார வைத்து
உடையும் அளித்து காத்துவந்தான்!
தாமே தந்தை போல்நிணைத்து
தன்னை மிகக்காத்தவனை
தந்திரமாய் இந்திர னாய் வெண்றான்.
மார்பிலே குத்திடத்தான் மாடோட்டி பயந்தான் ! பின்
முதுகிலே குத்திடத்தான்
முயற்சித்தும் முடியாமல்,
மதத்திலே சிக்கவிட்டான்.
சாதியால் சூதுசெய்தான்.
மந்திரத்திலே மாங்காய் முளைக்குமென்று
தமிழ் மறவனை நம்ப நம்பவைத்தான்.
மாடோட்டி வந்தவனே போரில்
தேரோட்டும் தேவனானான்.
மன்னனின் மந்திரியானான்.
மன்னனுக்கு போர்க்களமே மகிழ்சி தரும்.
எனக்கூறி தமிழ்
மன்னர்களை மோதவிட்டு,
மாண்டவனின்
மகுடமதை இவனெடுத்தே மாட்டிக்கொண்டான்.
மண்ணின் மைந்தர்களை வீணாய்
மோதவிட்ட வந்தேறி,மாடோட்டி.
மந்தியென்றும்,மந்தையென்றும்,
மாசுரர் இவனென்றும்,
மாண்புமிக்க தமிழிணத்தை
மாநிலத்தில் மறைத்தொழிக்க,
மண்ணை பூமாதேவியாக்கி
மாட்டை கோமாதாவாக்கி
புவிமுதல் மாந்தனை மண்ணாங்கட்டியென்றானே.
காத்து கருப்பு என்றானே.
ஓராயிர மறமியற்றியிங்கே
நாற்றிசையும் பரப்பியவன்.
ஒற்றுமை குறைவுபட
ஓயாமல்ஒருவனை மற்றொருவனழித்தான் .
ஓங்கு புகழ் தென்னவனை,
ஒப்பிலா திராவிடனை,
ஒன்றுக்குமுதவாத முடமாக்கி, மூடமாக்கி,
ஓரங்கட்டியவன் ஒழித்தே விட்டனனே.
உண்ணை நீ உணர்ந்துவிட்டால்,
உண்ப்பெருமை அறிந்துவிட்டால்.
விரைவாய் நீ மீட்டிட்டால் நம்மண்ணை
வெற்றி மகள் அணைப்பாலே யுண்ணை!
வரலாற்றை மாற்றிடநீ முயலாவிட்டால்,
வருங்காலம்மண்ணிக்குமோயுண்ணை
வெண்றிடுவோம் வீணர்களின் சூதுதண்ணை
வெற்றிமுரசு எட்டட்டுமேயடா விண்ணை.
எவ்விதத்திலும்
மூடநம்பிக்கையை
ஏற்றுக்கொள்ளோம்!
எவ்வுயிரையும்
தம்முயிராய்
நேசிப்போம்
ஜே. ஜி. ரூபன்.
12. 12. 12