உலகமொரு பூஞ்சோலை...
ஆத்துக்குள்ள அயிரை மீனு..
கூடிநிக்குது கொக்குக் கூட்டம்..
பார்த்துக்கடி சின்னப்பொண்ணு..
பக்குவமா நடந்துக்கடி..
ஊருக்குள்ள வயசு பையன்
உன்னை சுத்தும் நேரமடி..
புளியமரத் தோப்புக்குள்ள
போய் ஒதுங்கும் நேரத்திலே
பேய் ஒன்னு புடிக்கப் பார்க்கும் புரிஞ்சுக்கடி
அங்கே ஆசை வந்து சுத்துமடி..
ஆலோலம் பாடுமடி.. தெரிஞ்சுக்கடி
காதல் சொல்லும் மனசுக்கு
கடிவாளம் போட்டுக்க..
நல்லதுக் கேட்டது புரிஞ்சுக்க ..
நாட்டு நடப்பை அறிஞ்சுக்க..
நாளும் தெளிந்து உணர்ந்துக்க..
உணமைன்னு தெரிஞ்சாக்க..
உள்ளம் திறந்து பேசுங்க..
வாழ வழி இருந்தாக்க
வாசல் திறந்து வையுங்க...
காதல் என்னும் பேரால
காமம் மட்டும் வேண்டாங்காடி
காமம் மட்டும் இருந்தாக்க
காதலர்கள் செய்ச்சாலும்
காதல் அங்கு தோக்குமடி
காதல் அங்கு தோத்துப்போனா
காலமெல்லாம் கண்ணீரடி !
பூக்குமொரு காலம் வந்தா
காய்க்க ஒரு காலமுண்டு
காய்க்க ஒரு காலமின்ன
நோய்க்குமொரு காலமுண்டு..
தாக்கு பிடிக்க தெரிஞ்சுக்கிட்டா
தெகிரியமும் இருந்துபுட்ட
உலகமொரு பூஞ்சோலை...
உனக்கு அது வாசந்தரும்..!