ஓம் முருகா...ஓம் முருகா... குறை தீர்க்க வா முருகா...

ஆறுமுகமே
அழகிய திருஉருவமே
அன்பான பார்வையிலே
அகிலமே அடங்குமே

முருகா...முருகா-நின்
முகம்தனில் கண்டேன்
முழுமதியான அருளை
மூவுலகம் காத்திடும்
மூஞ்சுறு வாகனின் தமையனே

மூவேளையும் வணங்கிடும்-நின்
பக்தர்களை காக்கும்-கந்தா,
கடம்பா,கதிர்வேலா, கார்த்திகேயா
சரவண பொய்கையிலே
வாசம் புரியும் சக்திவேலா

மயிலத்திலே கோவில்கொண்ட
மால் மருகா,
சிவனின் மைந்தா
சித்தம் தெளிவு பெற
சிறிதேனும்-நின்
அருளை வழங்கிடு..

கருணை உள்ளம் கொண்ட
கார்த்திகேயா....
கார்த்திகை கன்னிகளால்
வளர்க்கப்பட்ட சண்முகா....
சக்தியின் சரவணா
சஷ்டி கவசத்தின் குருநாதா

தமிழ் கடவுளே
தரணி எங்கும் நிந்தன் புகழே
தஞ்சமொன்று அடைந்துவிட்டேன்
தப்பாமல் என்னை காத்திடு

ஓம் என்ற ஒலியிலே-வாழ்வில்
ஒளிசேர்க்கும் ஓம் ஓம்காரா
ஓம் முருகா,
ஓம் முருகா......!!!!!!!

என் சோகம் தெரிந்திங்கு
வேதனைகள் புரிந்திங்கும்
கண்கள் கசிந்திங்கும்
கலங்கி நிற்கும் கன்னியை
வேடிக்கை பார்பதென்ன
வேலா, வீழும் முன்
வீசும் தென்றலாய் வந்திடு
வடிவேலா வசந்தமொன்று வழங்கிடு
வெற்றி வேலா வேதனைகைளை போக்கிடு
சக்தி வேலா சடுதியில் நீ வந்திடு
சாபங்களை தீர்த்திடு ....

-PRIYA

எழுதியவர் : PRIYA (15-Jan-13, 8:14 pm)
பார்வை : 3459

மேலே