அவனும் இவனும் -பொள்ளாச்சி அபி

"ராத்திரியின் சொந்தக்காரன்
யாத்திரை சென்றான்..
பகலின் உரிமையாளனும்
பாத யாத்திரை போனான் ."

சந்தித்தவேளை...வந்ததுகேள்வி..யார்பெரியவர்..?

“ராத்திரிகளின் பாதுகாப்பு என் கையில்..
மக்கள் என்னை நம்பியே உறங்குகிறார்கள்.!”

“ஆமாம்..நம்புவது உன்னை..
வெற்றிபெறச் செய்வது என்னை.
எனது அடையாளம் வெண்மை
அதுவேயென் மனம்..,ஊர்நம்புது உண்மை..!”
அதனால் அடிப்பேன் கொள்ளை..
எனக்கு நிகர் யாருமிங்கே இல்லை.”

“உன்னைக் கைதுசெய்வேன்..!”

“ஹஹ்..ஹா..”

“சிரிக்காதே..எனக்கான பங்கைத் தா..”

ராத்திரியும் பகலும் வந்துகொண்டேயிருந்தன..!
உண்டியல்கள் நிரம்பிக்கொண்டேயிருந்தன.!
------------------------

தோழர் அகனின் -பாதி இங்கே மீதி எங்கே -இரண்டாவது பகுதிக்கானது.. நிபந்தனை மீறி இரு வரிகள் அதிகம்.பிழை பொறுக்க..!
அன்புடன் பொள்ளாச்சி அபி.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (16-Jan-13, 11:24 am)
பார்வை : 139

மேலே