ஒரு நிறவெறிக் கதை...
தூளின் கூச்சல்...
தூளுக்கும் துகளுக்கும்
வித்தியாசம் வேறில்லை....
பறந்தடங்கும் தூள்
நாங்கள்....
உருண்டு புரளும் துகள்
நீங்கள்....
எல்லைகள் கடக்க யாதொன்றும்
தேவையில்லை எமக்கு...
உமக்குத்தான் புரிதல் அவசியம்
எம் மழலையின் "ங்ங்கா"
மொழிதலும்....
உம்பொருள் கொணர்ந்து
எம் உறைதரிக்கும்
தந்திர வியாபாரிகள் நாங்கள்...
அடங்கி ஆண்டு
ஆளுமைப்படுத்தல் எம் வேதம்..
ஆண்டு பணிந்து அடங்கிவாழ்தல்
உம் மக்கள் சாபம்...
கண்ணில் விழுந்து உறுத்தும்
கலையை உமக்கு
கற்பித்தொழித்து நாங்கள்
எங்கு பொய் எழவு கொண்டாட...?
ஏட்டுக்கல்வி போதுமுமக்கு..
மூடிப் படுத்துறங்கு....
துகளின் துவக்கம்.....
கண்ணில் விழுந்து உறுத்தும்
கலை கைவசமில்லை....
எனினும் விழிபிடுங்கி
விரலிடையில் சுழற்றறிவோம்.....
உம் வேற்றுக்கிரக
பயணப் படிக்கட்டுகள் எம்
ஏட்டுக் கல்வியின் பூர்வீகம்....
கொஞ்சம் பொறுத்திரு.....
மழுங்கிய வாள் தீட்டும்வரை
உம் தூதர்கள் முதலில்..
பின் உமக்குத் துகிலுரிப்போம்..
உமக்கேது துகில்...!?
தோலுரிப்போம்.....உமக்கென
வெற்றிடம் நிரப்பிக் கொள்
சாம்பலாய் பறப்பதற்கு..