காதலியை மட்டும் காதலிப்போர்...
யாசித்து வந்த காதல்....
நிலைப்பதில்லை...
உண்மையாக பூஜித்து வந்த காதல்....
தோற்பதில்லை...
கனவோடு வந்த காதல்....
விழிப்பதில்லை....
நினைவோடு நின்ற காதல்...
அழிவதில்லை....
உடலுக்காக வந்த காதல்...
உயிர்ப்பதில்லை...
உணர்வோடு உயிர்த்த காதல்....
மரிப்பதில்லை...
வாழ்கையை காதலிப்போர்...
வருந்துவதில்லை...
காதலை காதலிப்போர்...
கலங்குவதில்லை....
காதலியை மட்டும் காதலிப்போர்...
கலங்காமல் வாழ்ந்ததில்லை....
வாழும் வாழ்க்கையை காதலிப்போம்!
வருத்தமில்லாமல் வாழ்ந்திருப்போம்!