நாகரீகத்தோடு வழக்காடு.......
என்னில் என்ன குறை கண்டீர் அன்பரே
உம் தரம் என்றும், உயர்வது சாத்தியமே !
உண்மை நிலைதான் அன்பரே
இவ்வுலகம் படும் பாடும் சாத்தியமே !
ருசியான பதார்த்தம் நீயும் உண்டு
உம் பசியாறி என்னை நீர் பழிக்கலாமா !
பசி மட்டும் போய் இருந்தால் பரவா இல்லை
உடல் தரம் கெட்டு போவதை நீர் மறுக்கலாமா !
உம் அழகு, தரம் உயர்த்திய நவ ஆடைகள்
அதை அணிந்து நீர் என்னில் குறைகாணலாமா !
இலை, தழையால் மானம் காத்த எம் பெண்டிற்கு
நூல் இலையால் காமம் உணர்த்தியது நீர் தானே !
இதோ, உம் அரணாக எம் மாடமாளிகை
அதில் வளம் பெற்ற நீர் என்னில் வழக்காடலமா !
இவ்வுலகை பாழாக்கும் உம் மாளிகை
எம் மரத்தடியோடு போட்டி காணலாமா !
அன்பரே, நான் தான் நாகரீகம்
என்னில் குறை கண்டால் இவ்வுலகை அழித்திடுவேன் !
அழிபவன் படைத்த படைப்படா நீ
என்னை அழிக்க நினைத்தாலே அழிந்திடுவாய் !