முயற்சி
நடக்க முயன்று - நீ
காலடி பதித்தால்
தூரம் ஒன்றும் சுமையல்ல!
பறக்க முயன்று - நீ
சிறகை விரித்தால்
வானம் ஒன்றும் பெரிதல்ல!
முளைக்க முயன்று - நீ
முடிவு செய்தால்
பூமி ஒன்றும் தடையல்ல!
கடக்க முயன்று - நீ
வல்லமை கொண்டால்
ஆழ்கடல் ஒன்றும் ஆழமல்ல!
இங்கு எல்லா எதிர்ப்பும்
முயற்சியைக் கண்டு
துவண்டு போகும் எதிர்ப்புகளே!
துணிந்து நாமும்
முயற்சி செய்தால்
எதுவும் இங்கு சாத்தியமே!