ஆடை அழகல்ல.. அது முகவரி .
ஆடையில் ஏன்
அரை குறை ..???
ஓ..
நீங்கள் பாரதிகண்ட
புதுமைப்பென்களோ ..??
கண்டாங்கி கட்டிய நாட்டிலா
இப்படி
கண்டபடி அலைகிறீர்கள் ..?
ஆடை உற்பத்தியில்
இந்தியாவுக்கு முதலிடம்
அப்புறம் ஏன்
அம்மனமாய் அலைகிறீர்கள் ..?
மறைக்க வேண்டியதெல்லாம்
திறந்து காட்டி
ஏன்னிந்த ஒழுங்கீனம் ..?
எது சுதந்திரம் ..
கணவன் ரசிப்பதை
கடை விரிப்பதா ..??
நம் மண்ணுக்கென்று ஒரு
மரியாதை இருக்கிறது ..
பாதம் பார்த்து நடக்காவிட்டால் ..
உன்னை எவனாவது
பதம் பார்த்துவிடுவான் ..!!
நீ பூ ..
புழக்கடையல்ல..
திறந்த மேனியாய் நீ
திரிந்தால் - உன்னை
பிறந்த மேனியாய் பார்க்கவே
சமூக கண்
சல்லடை போட்டுத்தேடும் ..!!
பூட்டி இருக்கும் வரை தான்
நீ புத்தகம் ..
திறந்தால்
நீ பொது நூலகம் ..!!
கண்ணகிக்கு சிலை வைத்தது
பெண்ணை போற்றுவதற்க்கல்ல..
கற்பை அடைகாக்க ..!!
நீ
சர்வ லட்சனமாயிருந்தால்
சகோதரி என்பான் ..
சாமுத்ரிகா கட்டினால்
சைட் என்பான் ..
உன் ஆடை
மூடியல்ல.. முகவரி ..
திறந்திருந்தால் ஈக்கள் வரும்
மூடியிருந்தால்
முட்கள் உன்னை பாதுக்காக்கும் ..!!
பெண்ணே ..
வீட்டுக்குள் விட்டிலாயிறு ..
வீதிக்கு வரும் போது
நெருப்பாயிரு ..!!!