என்று உதிக்கும்...
அடுக்கு மாடி
வீடு கூட
சிதிலமடைந்த
சின்னங்களாய்...
அரவணைக்க
ஆளில்லா
அனாதைகளாய்...!!!
உறவெனும்
நூலறுந்து...
உரிமையெனும்
வாலறுந்து...
எங்கோ பறக்கின்றன
உறக்கம் தொலைத்த
என்
ஈழத்துப்பட்டங்கள்...
இனி,
இழப்பதற்கொன்றுமில்லை!
என...இன்றும்
ஏதாவதொன்றை
இழந்தவர்களாய்...
கனவுகளை கலைத்துவிட்டு
கவலைகளை மூட்டைகளாய்
சுமந்து....
சோகச்சுவடுகளை
முகத்தினில் தாங்கி
ஏங்கித்தவிக்கும்
என்
ஈழத்துச்சொந்தங்கள்...
என்
தாயின்
கண்ணீரும்...
சகோதரியின்
பரிதவிப்பும்...
ஈழ மறவனின்
செந்நீரும்...
அக்னிக்குழம்பாய்
ஆர்ப்பரிக்கும்...!!!
அன்று...உதிக்கும்
என்
ஈழத்துச்சூரியன்
எங்களுக்கு
மட்டுமாய்....