தேவதைகளின் காணிக்கை
உன் அழகைப் பெற்றிடத்தான்
ஒவ்வொன்றாய் தேவதைகளும்
காணிக்கை செலுத்துமடி
குலதெய்வம் கோவில்களில் !
உன் மொழியை கேட்டிடத்தான்
செவியிரண்டு வேண்டுமென -என்
தோட்டத்து மல்லிகைகள்
நோன்பிருந்து வாடுதடி -கணபதிமுன்
தோப்புக் கரணம் போடுதடி !