என் காதலை சொல்ல ...
இரவு முழுக்க
இன்ப அவஸ்தை ...
தூக்கம் இல்லாமல்
துடித்தேன் புழுவாய்...
விடியும் முன்னரே
விழித்துக்கொண்டேன் ..
இதயம் வேகமாய் துடிப்பதை
உணர முடிந்தது என்னால் ...
குளிக்கும் போதும்
வேர்த்தது எனக்கு ...
கண்களில் பட படப்பு ..
கைகளில் நடுக்கம் ...
உதடுகள் நடுங்கின ...
உள்ளாடை நனைந்தன ..
தைரியமாயிரு ..
சமாதானம் சொன்னது அடிமனது ..
எப்படியோ
தயாராகிவிட்டேன்
என் காதலை உன்னிடம் சொல்ல ...!!