இறைவனின் பரிசு (அனாதை இல்ல குழந்தைகளுக்காக ..)

இங்குள்ள குழந்தைகள்
இறைவனின் இருப்பிடம்
இவர்களை நான் என்ன
வார்த்தை கூறி அழைப்பது ?
- கடவுளின் செல்லக்குழந்தைகள்
என்பதை தவிர ..

நாம் அனைவரும் தாயின்
கருவறையில் வசித்தவர்கள் -ஆனால்
இவர்கள் என்றும் இறைவனின்
கருவறையில் வசிப்பவர்கள் ...

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (22-Jan-13, 5:22 pm)
பார்வை : 198

மேலே