காதல்... இப்படியும் மொழியப்படும்..

அவனும் வேண்டாம்
அவளும் வேண்டாம் - அதுவெனக்
கொள்வோமா ....?

அலுவலக முற்பகல்
தேநீர் இடைவெளி.. அறைக்குள்
நுழைந்தது அது...

கவிழ்ந்த தலையும்
துடிக்கும் இதழ்களுமாய்- எதிர் நின்றது
அது.... அதனெதிரில் இருக்கை
கிடந்திய சிலையாய் இன்னொரு
அது....

துவங்கியது முதல் அது....
விழிநோக்கிப் பேசும்
நேரடிப் பார்வைகள்.... வெளிர்ந்த
ஆடையில் நிமிர்ந்த நன்னடை..
உதட்டுவரியும் அதிரா மென்மைக்
குரல்..
தவறுகள் திருத்தும் புன்னகை
குழைத்த நுண்ணறிவு..
கடந்தவர் திரும்பும் சராசரி
அழகு....
துரத்தும் இவைகளில்
தொடர விரும்புகிறேன் உன் மீதான
காதலை...
ஒரேயொரு ரகசியம் சொல்....
"நீ எந்த சாதி ?"

மொழிந்து விட்டு
விழி நோக்கியது முதல் அது...

சூடிழந்த தேநீரை
ஒற்றை மிடறில்
உள்தள்ளி தலைகவிழ்த்துக்
நெற்றியதில்
விரல் பதிக்கிறது மற்றொரு
அது....

இப்படியுமாய் மொழியப்படுகிறது
இன்றும் சில
"இனக் " கவர்ச்சிக் காதல்கள்....

எழுதியவர் : சரவணா (22-Jan-13, 5:24 pm)
பார்வை : 174

மேலே