மந்தைக்குள்ளும் மானுடம்
கந்தையில் வீணரோடு
களி நடம் புரிந்தே
விந்தை பல செய்து
சிந்தையிலாது சீரழிவ தேன்..?
மந்தை ஆடென
மதி மழுங்கியே
குந்தகங்கள் குடைந்தெடுக்கும்
இன்பமிலா இடுக்கண்
பல சேர்பதுவுமேன்..?
முற்றிய கத்தரி சந்தை சேரும்
விலையாகி வீடேறும்.
"சொத்தை" என நீயிருந்து
குப்பைசேர்வதுவும் ஏன்...?
அறிவே சொத்தென்று
அறிவுரை சொல்லிவைத்தால்
வேப்பங்காய் தின்றது போல்
வெம்பித்தான் அகன்றிடுவாய்.
ஆதலினால் ,
அந்தி மாலை அவைவிடுத்து
அதிகாலை விழித்து,
உள்ளமதை ,
உள்நோக்கி வாசித்தே..
சற்றும் தளராத
சாந்தமதி நீ பெறுவாய்.,
சாற்றுப் பறைகொட்டி
உள்ளம் மலர்வாய் நீ ..
இனியெல்லாம் .
சிந்தையில் ஊறிடும்
நல்அறிவு சேர்ப்பாய்
மந்தை சேரிடினும்
தெளிவாய் நல்
மானுடம் காப்பாய்..,
மானுடமே
....காப்பாய்!