இதழ் உதிர்வுகள் (கவிதையாய் )
காகிதத்திற்கே தெரியாது
தான் சுமக்கும்
வரிகள்
இனிமையடைய போகிறதென்று!
பேனாவிற்கே தெரியாது
தான் எழுதும்
எழுத்துக்கள்
வசந்தமடைய போகிறதென்று !
மூளைக்கே தெரியாது
தான் நினைக்கும்
வார்த்தைகள்
வளமடைய போகிறதென்று !
இருந்தும் தொடர்கிறது
இதயத்தின்
இதழ் உதிர்வுகள் ....
முகர்ந்து பார்த்து
ஏக்கம் கொள்கிறது
உதிர்ந்த இதழ்களின்
வாசனையை ..........
என் இதயம் !!!