விழப் பயந்து விட்டால்
எனது வாழ்வின்
கருப்பு பக்கங்களே,
எனக்கு வெளிச்சத்தை
அடையாளம் காட்டின.
விழப் பயந்து விட்டால்
உட்காரக்கூட முடியாது.
எழ துணிந்து விட்டால்
தடைகள் கண்ணுக்கு தெரியாது.
நடையை இழந்தாலும்
நான் என் தடைகளை
இழக்க நினைத்ததில்லை.
உந்திய பின்தான் நடைகள் - அனால்
உந்து சக்திகள்தான் தடைகள்
பயந்த நொடிகள் பொய்யாகும்
பயன்தோமா என்று
வியந்த நொடிகள் மெய்யாகும்
தோல்வியே அடையாதது
வெற்றியே அல்ல - அது
தோல்விகளை கடப்பதுதான்!
-எழுத தெரியாதவன்