இலையில் உருளும் நீர்
எளிதாக உள்ளதென்று
தோன்றும் எதையும்
செய்து கொள்ளாமல் ,
சரியென்று தோன்றும்
எதையும் விலக்கி
வைக்காமல்,
தவறென்று தோன்றும்
எதுவும் செய்து கெடாமல்.,
வாய்ப்பென்று வந்தபோது ,
ஒதுக்கித்தள்ளாமல்,
நம்மைத்தேடி
நன்மையொன்று
இழைந்து வரும்
இயல்பு வாழ்வைப்
பிணைத்துக்கொண்டாலே..,
இடுக்கண் என்பது
இலையில் உருளும்
நீர்தானே ........!