தோழியே.....நீ எங்கே....?!!!

மறுபடியும்............

பசி தோற்கடித்து.....
பக்கம் பக்கமாயமர்ந்து.....
பகலிரவு பாராது...மன...
பாரங்கள் அறியாது...கை
பற்றியே தோள் சேர்த்து..
பாண்டி தொட்டுப் பிடிச்சி
பல்லாங்குழி ஆடி
பரிட்சையில் காப்பி அடித்து
பாசம் என்றால் நட்பு என்று
பழகியே மகிழ்ந்திருக்க

படைத்தவனே நட்பை
படைத்தவனே.....

எங்களை மறுபடியும் சிறு பிள்ளையாக்கு...!

பருவம் ஏன் கொடுத்தாய் ? பிள்ளை மனம்
பாழாய் அழிவதற்கோ ?

உறவுகள் கோடி உண்டு
உவகையை அள்ளிக் கொடுக்க.....

இருந்தும்.....ஏங்குகிறோம்........

எங்கே அச் சிறு வயது நட்பு.....?!!!

இறைவனே......

இன்னுமொருமுறை ஆக்கு அதைபோல் எங்களை

மறுபடியும்........

எழுதியவர் : HARI HARA NARAYANAN (25-Jan-13, 1:50 am)
பார்வை : 539

மேலே