திருவிழா!!!
ஊரெங்கும் ஒலி முழங்க,
அணையாது ஒளி ஜொலிக்க,
உறவெல்லாம் சேர்ந்திருக்க,
உற்சாகம் நிறைந்திருக்க,
நடைபெறவில்லை என் திருவிழா...
அப்பாவின் அதட்டல்
சங்கீதமாய் ஒலிக்க,
அம்மாவின் அன்புமுகம்
அணையாது ஜொலிக்க,
சகோதர, சகோதரிகள்
அரவனைப்பில் சேர்ந்திருக்க,
நான் பெறும் இன்பத்தை
தரவில்லை எந்த ஒரு திருவிழாவும்
தினந்தோறும் எனக்கு...