என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்

இறந்த அறுபத்தி இரண்டு ஆண்டுகளை சேர்த்து
இன்றோடு பலஆட்சிமுறைகள் கைகோர்த்தும்
கைவிரிக்கப்பட்ட நிலைதான் !

சுதந்திர மூச்சு இன்னும் சுவாசிக்காத இனமாய்
இன்றும் காலம் தள்ளி கொண்டுஇருக்கிறது-என்
இந்திய மண் !

உற்று நோக்கினால் அங்கங்கு தென்படும் அதே
வெள்ளையின அட்டூழியங்கள் மறைமுகமாய்
இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறது !

காந்தியின கொள்கை காலவதி கொள்கையாய்
போதும் போதும் என்று பயனற்ற முள்
செடியாய் விளைந்து விரிந்து நிற்கிறது !

வேடிக்கை பார்ப்பதில் இந்தியாவை போன்றொரு
வல்லரசு மற்ற தேசத்திற்கெல்லாம் ஓர்முன்
மாதிரித்தான் - விளங்கவில்லை இதுதானா
அஹிம்சை !

பின் எதற்கு எல்லையில் ராணுவம் -அண்டை
நாட்டிற்கு இந்திய இராணுவ வீரரின்
மண்டையை விளையாட கொடுத்து
வேடிக்கை பார்பதுதான் அகிம்சையா !

"சை" என்று ஆகிவிட்டது இதற்கு
சுதந்திரம் எதற்கு நம் மண்டையை
வெள்ளையினத்துகே விளையாட
கொடுத்திருக்கலாம் !

அண்டை நாட்டின் துரியோதனர்களுக்கு ஈவு
இறக்கம் காட்டும் இந்தியா -தன சொந்த
நாட்டில் மட்டும் தறிகெட்ட சட்டத்தால்
தண்டனை விதிக்கிறது !

போர் வேண்டாம் என்பவர்கள்தான்
மொத்த போர்கருவிகளையும் குவித்து
வியாபாரம் செய்கின்றனர் - காமுகன்
என்றறிந்தும் நம் வீட்டு கன்னி பெண்ணை
காக்க காவல் வைத்தால் !

அதுதான் இங்கு நடக்கிறது-ஹிட்லரின்
ஆட்சியில் அஹிம்சை செல்லுமா-இப்போது
அண்டைநாட்டின் ஆட்சியும் அப்படிதான்.

ஆயிரம் சிக்கல் வெளியில் என்றால்
கோடி சிக்கல் உள்ளே -கேட்டால் இந்தியா
ஜனநாயக நாடு என்கிறது சட்டம் !

அன்று அடிமை பலரால்
இன்று அடிமை நம்மால்
நாளை அடிமை யாரால் ?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் !
********************************************************************************
இது குறித்த விமர்சனங்கள் அதிகம் வரவேற்கப்படுகின்றன
குடியரசு தினம் விரைவில் நன்றாய் அமைய இந்திய
இளைஞனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் -

வாழ்க செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வளர்க இந்திய நாடு !
ஜெய்ஹிந்த்

எழுதியவர் : கார்த்திக்(திருநெல்வேலி) (26-Jan-13, 4:25 pm)
பார்வை : 192

மேலே