புறப்படு தோழி
பெண்ணே
பஞ்சென்று சொன்னவர்க்கு
நீ நஞ்சென்று காட்டு
பேருந்தில் உரசம்
எருமைகளுக்கு நீ
தீக் குச்சி என
உரசிக் காட்டு
எங்களால் மாமியார்களின்
ஸ்டவ்கல் கூட ஒரு நாள்
வெடிக்கும் சாமியார்களின்
முகத்திரையும் ஒரு நாள் கிழியும்
தூங்கும் காவலர்களும்
ஓட்டை சட்டங்களும் நமக்கு
இனி வேண்டாம்
துணிவு மிக்க உள்ளங்களும்
கை விரல் நகங்களும் போதும்
டெல்லி சகோதிரியின்
கோர முடிவு இனி வேண்டாம்
நக்கிப்பார்க்கும் நாய்களின்
நாக்கை அறுத் தெறிவோம்
கோழி கூவினாலும்
விடியல் பிறக்கும்
கோலம் போடும் கைகளும்
கத்தியை பிடிக்கும்
உறங்கியது போதும் தோழி
இனி விழித் தெழுவோம்
சமுதாய புதுப் பாதையில்
புரட்சியை விதைத்தே
புது விடியலை படைத்திடுவோம்