ம. ரமேஷ் ஹைபுன் – 15

ம. ரமேஷ் ஹைபுன் – 15

தேசிய நதி நீர் இணைப்பு சாத்தியமில்லை… மாநிலத்திற்குள் ஓடும் நதி நீர் இணைப்பும் சாத்தியமில்லை. இதையெல்லாம் விடுங்கள்… பக்கத்து கிணற்று நீர் அந்தச் சாதியினருக்கும் இந்தச் சாதியினருக்கும் இல்லை… சரி பக்கத்து ஆழ்த்துழைக் கிணறு நீர்கூட வழிப்போக்கருக்கு இல்லை… நல்ல பண்பாடு போங்கள்… ஒரு கிளாஸ் தண்ணி 2 ரூபாயாகிவிட்டது.

யார் கமலண்டத்துக்குள்
அடங்கிப் போனது
காவிரி நதி நீர்

(இப்படியும் எழுதலாம்… புதியதாக எழுதுபவர்களுக்கான மாதிரி இது:

எந்தச் சாதியினருக்கும்
இல்லை என்று சுரக்கிறது
கிணற்று நீர்

அரசியல்வாதிகளைப்போல்
வளைந்து வளைந்து செல்கிறது
ஏதும் அறியாத நதிகள்

கிணற்றை எட்டிப்பார்த்து
ஏமாற்றத்துடன் திரும்பியது
வெண்ணிலவு

மோர் தயிர்
தந்த பண்பாடு
தண்ணீரை மறைக்கிறது

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (26-Jan-13, 4:59 pm)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 126

மேலே