(1) தந்திர காட்டில் நான் -(1.திக்குதெரியாத காட்டினிலே)

இயல் பூத்து குலுங்கும் தமிழ் இலக்கிய அன்பர்களே
இந்த தொடர் கவிதைக்கு ஓர் வாய்ப்பளியுங்கள் .
உங்கள் ஆதரவை விரும்பி கவிஅரசர்களாய்இத்தளத்தில்
விளங்கும் நல்லாசியுடன் என் கவிதொகுப்பை இனிதே துவங்குகிறேன் .

என்அறிவில்(எனக்கும் கொஞ்சம் இருக்கு ) சுடர் விட்ட பலரில் கவிதெய்வம் பாரதியும் ஒருவர் அவருக்கு இத்தொடர் கவிதை சமர்ப்பணம் .(இவன் overa போரண்டா என்று நினைக்கும் அன்பர்கள் பொருத்து கொள்ளுங்கள் )பிழை கண்டால் பொறுத்தருளவும் .

அன்பு தோழன்
கார்த்திக்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
****** 1.திக்குதெரியாத காட்டினிலே! **********


பச்சை போர்த்திய புது உலகம்
மண்ணில் தோன்றிட கண்டேன்
மின்னல் போன்றொரு மௌனம்-அது
எனை சுண்டி இழுக்கும் பெரும் காந்தம் !

கவ்வி கொண்டு எனை இழுக்க
புத்தி இழந்து உள் புகுந்தேன் !

இனிய பலவகை ஓசை -தழுவியும்
அமைதி குலையாத காடு !
நெஞ்சம் புதியதொரு வண்டாய்
மொய்த்தது வாச மலர்களை சுத்தி !

முத்தி கொண்டன கண்கள் புது
காதல் பிறந்திட்ட தேனாய் !

காட்டை அளந்திடும் பாம்பும்
ஆற்றை கடந்திடும் மானும் -அதில்
யோக நடன செய்யும் மீனும் -வயதில்
வானை மிஞ்சும் மரமும் -அந்த
மரத்தில் ஒன்றிவிட்ட கிளியும் !
மனதை வருடும் மயிலினமும்
குதித்து கூத்தாடும் குரங்கினமும்-எனை
தொடர்ந்து வந்த சருகொலியும்
துணையாய் இருந்தன அக்காட்டில் !

புது பிறவி எடுத்தது போலே-பரவச
லயத்தினில் ஆடின என் கால்கள் !
சொல்ல முடியாத கூத்தில் புது
சக்தி பிறந்தது மூச்சில் !

....................................(தொடரும் )......................

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (26-Jan-13, 9:31 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 135

மேலே