தைப்பூசம் நாளில்...
தந்தையின் குருவாய் நின்றோன்
தாரக சூரனை வென்றோன்,
கந்தனாம் நாமம் கொண்டோன்
கையினில் வேலைக் கொண்டோன்,
செந்திலில் அருளைத் தருவோன்
சேந்தனாய் அழைத்தால் வருவோன்,
தந்தையாய் அருள்வோன் தன்னை
துதித்திடு பூசம் தன்னில்...!