தமிழைப் படி பக்தனே

புதுக்கவிதை: தமிழைப் படி பக்தனே 27.1.2013
வே.ம.அருச்சுணன்

நாட்டின் தொலைதூரத்திலிருந்து
என்னைப் பக்தியோடு காண வந்த பக்தனே
உன்னை ஒன்று கேட்பேன்
தெளிவாகப் பதில் கூறு......!

தமிழ்க்கடவுளே......!
பத்துமலை முருகனே
அன்பின் பிறப்பிடமே
என் தெய்வமே
உண்மைப் பக்தனான என்னிடம் கேள்வியா......?
என்ன சொல்கிறாய் முருகா...?
எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே
என் பக்திமீது சந்தேகமா முருகா....?
விளக்கமாகக் கூறுங்கள்

பக்தனே......!
நான் சொல்லப் போவதைக் கவனமுடன் கேள்
நீ பேசும் தமிழைக் கேட்டேன்
தமிழை நீ உச்சரிக்கும் முறையக் கேட்டேன்
காதில்.......!
ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருக்கிறது......!

முருகா......!
இதுவென்ன சோதனை.......?
என் தமிழ் உச்சரிப்பில் பிழையா....?
பக்தா.....உண்மையைக்கூறு
தமிழ்க்கடவுளான என்னை வணங்கும் பக்தனே
நீ தமிழ்ப் படித்தாயா......?
...................................................!

பக்தனே.........ஏன் மௌனமாகிவிட்டாய்.?
உன் உடல் ஏன் நடுங்குகிறது?.
ஏன் உன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டாய்?
நீ தமிழ்ப்பள்ளிக்குச் சென்றாயா......?
அங்கு முறையாகத் தமிழ்ப் படித்தாயா.....?

முருகா......உங்கள் முகத்தைப் பார்க்க
எனக்குத் தைரியம் வரவில்லை.....!
தமிழுக்குக் கடவுளாக வீற்றிருக்கும்
தங்கள் தமிழைப் படிக்காமல் போய்விட்டேன்
தங்களுக்குத் துரோகம் செய்துவிட்டேன்....!
என்னை மன்னியுங்கள் முருகா....!
தமிழ் மக்களுக்காக
நான் பாடியப் பாடல்களை
நீ படிக்காமல் போய்விட்டாயே
பயில உனக்கு மனம் இல்லையா......?
உன்னைப் பெற்ற தாய் பேசிய தமிழை
நீ உதாசினம் செய்துவிட்டாயே
தமிழை மறந்தவன்
பெற்ற தாயை மறந்தவன் ஆயிற்றே......!

‘தமிழைப் பழித்தவனைத் தாய்
தடுத்தாலும் விடேன்’ என்றாரே
புரட்சிக்கவி பாரதிதாசன்
அவர் கருத்தை மறந்து விட்டாயா... ?

முருகா,
மதி கெட்டு கடமையை மறந்து விட்டேன்
வயிற்றுப் பிழைப்புக்காக
தாய்மொழியை மறந்துவிட்டேன்
என்னை மன்னித்துவிடுங்கள்
என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள்
உங்களை நம்பி வாழ்கிறேன்......!
இப்போது நான் திருந்திவிட்டேன்
என் பிள்ளைகளை இனி மறக்காமல்
தமிழ்ப்பள்ளிகளுக்கே அனுப்புவேன்
மெத்த படித்த
ஒவ்வொரு தமிழரும் தம் பிள்ளைகளைத்
தமிழ்ப்பள்ளிகளுக்கே அனுப்பச் சொல்லி
நேரில் சென்று எடுத்துச் சொல்வேன்.......!

நம்மிடையே நிலவும் பேதங்களை மறந்தது
நமது சகோதரர்கள் அனைவரும் இங்கே
தமிழுக்காக இணைவதற்கு
கடுமையாக உழைப்பேன்
என் பங்கிற்கு தோள் கோடுப்பேன்
தேவைப் பட்டால்
என் உயிரையும் கொடுப்பேன்....!

********************

எழுதியவர் : வே.ம.அருச்சுணன் (27-Jan-13, 1:41 pm)
சேர்த்தது : வேமஅருச்சுணன்
பார்வை : 176

மேலே