என்னை ஹிந்து என்று இந்த நாடு சொல்வதால்..... நான் நாத்திகனானேன்...!

என்னை ஹிந்து என்று இந்த நாடு சொல்வதால்..... நான் நாத்திகனானேன்...!

(தமிழர்கள் தயை கூர்ந்து இந்த பதிவை பொறுமையாக படிக்கவும்)

கடவுள் மற்றும் மத நம்பிக்கையற்ற என்னை போன்றோர் ஏன் ஹிந்து மதத்தை மட்டும் அதிகமாக சாடுகிறோம், சிறுபான்மை மதத்தினரிடம் அதிக நட்பு பாராட்டுகிறோம் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள் முகநூல் பக்கங்களில். அவர்களுக்கு என் போன்றோர் சார்பாக என் அன்பான பதில் இது...

இந்தியாவில் உள்ள சிறுபான்மை மதங்களை தழுவியவர்கள் எவரும் பெரும்பான்மையாக நிர்பந்தத்தின் காரணமாக மதமாற்றம் அடைந்தவர்கள் இல்லை. ஹிந்து மதத்தின் பாராபட்சமான அணுகுமுறையும், சமதர்மமற்ற, சம நீதியற்ற, ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களே சிறுபான்மை மதங்களை தழுவியுள்ளார்கள். இதை நான் விரிவாக விளக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று எண்ணுகிறேன்.

இந்தியாவில் உருவாகிய நிறுவன மதங்களும், மற்ற நாடுகளில் தோன்றி இந்தியாவில் பரவியுள்ள சில நிறுவன மதங்களும் அதன் வளர்ச்சியையும் உற்று நோக்கினால் அதை புரிந்துகொள்ள முடியும். உண்மையில் இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய சிறுபான்மை மதங்களின் தோற்றத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் காரணமாய் இருந்தது பிறப்பால் வேறுபாடு கொண்ட, வர்ணாசிரம பேதம் கொண்ட ஹிந்து மதம்தான்.

தமிழர்களின் மதம் பற்றி இதில் விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. பண்டைய தமிழர் அறநெறி வாழ்வில், மதங்களை பிரதானபடுத்தி தமிழர்கள் வாழ்ந்தவர்கள் இல்லை. இனக்குழு வழிபாட்டு முறைகளும், ஊர் அல்லது அந்த நாட்டின் கட்டுப்பாடுகளுமே அறநெறியாய் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்கள். கடைச்சங்க காலத்தில் ஏற்பட்ட அந்நியர்களின் ஊடுருவல், அவர்களின் மத நம்பிக்கைகளுமே தமிழர் நிலத்தில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. தமிழர்களுக்குள் மிக பெரிய பிளவு சக்திகளாக மதங்களை மாற்றி நிறுத்தி வேடிக்கைகள் அரங்கேறியது.

தமிழர்களையும் ஹிந்துக்கள் என்று சொல்லும் நிலைமையை ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களால் இங்குள்ள சிறுதெய்வ வழிப்பாட்டு முறையான குலதெய்வ வழிப்பாட்டு முறைகளை வேறுபடுத்த தெரியாமல் நிறுவன மதங்களுக்குள் வரையறை செய்ய முடியாமல் பொதுவாக அனைவரையும் "ஹிந்து" என்று அழைக்கத் தொடங்கினார்கள். ஒரு முக்கியமான விடயத்தை நாம் கூர்ந்து நோக்கி கவனிக்க வேண்டும்.

ஆங்கிலேயர் காலத்து சொத்து ஆவணங்களில் தமிழர்கள் தங்களின் மதமாக "ஹிந்து" என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மாறாக சைவ மதம், வைணவ மதம், பௌத்த மதம், சமண மதம் என்றுதான் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள். தமிழர்கள் பெருமையோடு தங்களை ஹிந்து என்று சொல்லிக்கொள்வது சரியான செயல் அல்ல. வர்ணாஸ்ரம ஹிந்து மதத்தின் பாரபட்சமான செயல்பாட்டால்தான் தமிழர்கள் கடந்த சில நூறாண்டுகளில் மேற்கத்திய வரவான இஸ்லாமிய மதத்தையும், கிருத்துவ மதத்தையும் தழுவி நிற்கிறார்கள் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அந்த மதங்களிலும் இன்று சாதிய வேறுபாடுகள் இருக்கிறது என்றால் அதற்கும் ஹிந்து மதமே காரணமாய் இருக்கிறது என்பதே உண்மை.

இனியும் ஒரே நேர்கோட்டில் ஹிந்து மதத்தோடு மற்றைய சிறுபான்மை மதங்களை அணுகவேண்டும் என்று என் போன்றோருக்கு அறிவுரை வழங்குவதை உங்களை போன்றவர்கள் தவிர்த்துவிட்டு உண்மை நிலையையும், வரலாற்றின் பக்கங்களையும் பார்த்துவிட்டு வந்து பேசுங்கள்.

கா.நா.மருதநாயகம்.

தற்போதைய இணையத்தில் நிறைய பேர் சரியாக பொருட்களை அறிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். அதாவது படிக்காமல் கொள்ளாமல்...காட்டாக,

பார்ப்பனியம் என்று நாம் அடிக்கடி குறிப்பிடுவதை எவ்வாறு பொருள் கொள்கிறார்கள் என்றால், தமிழ் சாதியில் பார்ப்பான் அதாவது அய்யர் மற்றும் அய்யங்கார் என்ற சாதியினரை குறிப்பிடுவதாக .....இதில் ஒரு பத்து சதவீதம் தான் பொருள் இருக்கிறது. அப்படியென்றால் பார்ப்பனியம் என்றால் என்ன..? பார்ப்பனியமே இந்து மதமாக மாறியது. பின்னர் இந்து மதம் இந்து மயமானது..பின்னர் இந்து மயமாக்கல் ஆகி இன்று இந்து பாசிசமாக உருவெடுத்து விட்டது என்று கூறுகிறோம்.

பார்ப்பனியம் என்றால் சுருங்கக் கூறின், பிறப்பால், பிறப்பை வைத்து கூறும் அணைத்து கருதுகோள்களும் நெறிமுறைகளும் பார்ப்பனியம் ஆகும், இந்த பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் தான் பிராமணர்களும் பனியாக்களும். எனவே அணைத்து பிராமணர்களும் பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிப்பதில்லை. அவர்கள் மொழியில் சொல்வதானால் 'அணைத்து பிராமணர்களும் இந்துத்துவவாதிகள் அல்ல...ஆனால் இந்துத்துவவாதிகள் அனைவரும் பிராமணர்களே... ( முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல...ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்பார்களே...அதுபோல...)

இந்துத்துவம் மனித குலத்திற்கு எதிரானது.மனித குல வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது என்று பெரியார் கூறுகிறார்.பெரியார் என்ன பெரிய இவரா...? என்று கேட்கும் போக்குதான் இன்று இணையத்தில் இருக்கிறது. பெரியார் எழுதிய புத்தகங்களை படிக்காமல் கொள்ளாமல் எழுதுவதும் பேசுவதும் என்று.....இன்று இணையம் கரும் புகைபோல சூழ்ந்துள்ளது.
எல்லாவித சங் பரிவார்கள் கூட்டம் தான் இணையத்தை நடத்துகிறார்கள்....அவர்களே எழுதுகிறார்கள்...புதிய கருத்துக்கள் உண்மைத் தன்மை, சமூக புரிதல் குறித்தெல்லாம் ...என்று மட்டும் அல்ல ....ஆக அனைத்தையும் வர விடாமல் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்...

பெரியாரை படியுங்கள்...பின்னர் பெரியாரின் சீடராக மாறிவிடுவீர்கள்....பார்த்தவுடன் பற்றி எரியும் நெருப்பு தான் பெரியார்...
சமூக சிந்தனை, ஜனநாயகம்...சுதந்திரம் குறித்த முதல் நுழைவாயில் தான் பெரியாரியம்...பெரியாரியம் அறியாமல் ஜனநாயகத்தை அறிய முடியாது.

முகநூல் டுவிட்டர் போன்ற சமுக வலைத்தளங்கள் முழுக்க சங் பரிவார் கருத்துக்களை கொண்ட ...அதுவாகவே மாறியவர்கள் தான் எழுதுகிறார்கள்...( சிறந்த பதிவுகள் இல்லையா..? என்று எதிர் கேள்வி கேட்காமல்...) பதிவுகளை இடுகிறார்கள் என்று இல்லை...பொதுவான தளங்கள், இலக்கிய தளங்கள் என்று ஒன்றைக் கூட விட்டுவைக்கவில்லை இந்த இந்து பாசிஸ்டுகள்...

இவர்களிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பும் கடமையும் இருக்கிறது முற்போக்கு சிந்தனைவாதிகளால்...சமூக சிந்தனைகளை உயர்த்திப் பிடிப்பவர்களால்...என்றால் மிகையில்லை...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (28-Jan-13, 10:45 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 253

சிறந்த கட்டுரைகள்

மேலே