ஜனநாயகம்

விளக்குக்கு
ஓட்டுப் போட்டுவிட்டு
விட்டில்கள் திரும்பின.
வெளிச்சத்தில் பார்த்தால்
கருகிக் கிடக்கின்றன
இருட்டுக்களாய்.

மதில் மேல் ஏறும்
தலை கீழாய்த் தொங்கும்
அரசியல் தெரிந்த
பல்லிகள் மட்டுமே
வெளிச்சத்தில் ராஜாக்கள்.

எழுதியவர் : மருதபாண்டியன் (28-Jan-13, 9:54 pm)
சேர்த்தது : maruthu pandian
Tanglish : jananayagam
பார்வை : 143

மேலே