"தீ"..க்குள் விரலை விட்டால்..
"தீ"..க்குள் விரலை விட்டால்..
"தீ"..க்குள் விரலை விட்டால்.. உனை
தீண்டும் இன்பம் தோன்றுதடி..!! சகியே ...
" உயிர் வரை நீளும் ...
ஒரு திரியில் ...
உதயமாகும் -- இந்த "தீ"..
என் இதயத் "தீ"..!!!
" மூச்சு கட்டுக்குள் ...
உரசி உரசி மூளப் பார்க்கும்..
மூங்கில் காட்டுத் "தீ"..!!!
"விக்கும் வார்த்தைகளை ...
உருவி உருவி கொளுத்தி போடும்..
இடுகாட்டு கொள்ளித் "தீ"..!!!
" சிறு சிறு தீண்டலில் ...
சிதறி படரும்..
சிக்கி முக்கி "தீ"..!!!
"எறும்பாய் ஊரும்
பார்வைகளில் பற்றி படரும்
மின்சாரத் "தீ"..!!!
" உன் பாத பள்ளங்களில் ...
என் பாதம் பதிக்க ..
பற்றி கொள்ள காத்திருக்கும் ...
பாதரசத் "தீ"..!!!
" இரத்த "தீ"... கொதிப்படங்க..
முத்த "நீர்" ...ஊற்று !!
" அன்பே..
அடிக்கடி என்னை தீயில் தள்ளு..!!
அழகே ...
நீயே ... தீயாய் நில்லு!!

