கவியின் புலம்பல்

கவி உலகில்கால் பதித்தேன்
கவிஞன் என பெயர் படைத்தேன்
கவியரசி உன்னை மட்டும்
காலமெல்லாம் நானிழந்தேன்

நீல் வானம் பெய்வதில்லை
கார்காலம் நிலைப்பதில்லை
அப்படியே நடந்தாலும்
என் காதல் கிடைப்பதில்லை

வாழ்க்கை என்னும் வட்டத்தில்
நான் இன்றோ வாடு பொருள்
வட்டத்தின் முற்றத்தில்
நான் ஒரு நாள் உயர்வு பொருள்
அன்றெண்ணி என்ன பயன்
மண் திண்ணியான பின்னர்

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (30-Jan-13, 1:47 pm)
சேர்த்தது : dananjan.m
Tanglish : kaviyin pulambal
பார்வை : 118

மேலே