!!!!===((( என்னவளே அடி என்னவளே )))===!!!

உன்னைப் பார்த்த பொழுதினிலே
உள்ளம் மெல்ல சிரிக்குதடி
உன்னைப் பிரியும் பொழுதினிலே
உள்ளம் உடைந்து தெரிக்குதடி

கண்களை சிமிட்டி நீ பார்த்தால்
காதலும் உன்னைக் காதலிக்கும்
கண்களை மூடி நீ உறங்க
கடலும் உனக்குப் பாய் விரிக்கும்

அன்ன நடை நீ நடக்க
ஆதவனும் உன் பின் தொடரும்
அடடா உந்தன் அழகினிலே
அடக்கம் கூட நிறைந்திருக்கும்

பற்களின் அழகை பார்ப்பதற்கு
பால்நிலவும் பூமிக்கு தரையிறங்கும்
பளபளக்கும் உன் கன்னத்திலே
பனித்துளி காலையில் சறுக்கி விழும்

கூந்தலின் அழகை காண்பதற்கு
கூகுளும் உன்னைத் தேடி வரும்
குழந்தை போல் நீ சிரிக்கையிலே-என்
குட்டி இதயம் சறுக்கி விழும்

எழுதியவர் : ராஜ்கமல் (30-Jan-13, 5:51 pm)
பார்வை : 159

மேலே