அவள் பயணம்

அவள் பயணம்
இன்னும் முடிய வில்லை..
கவிதையில்லா பொழுதுகளும்
கனவில்லாத வாழ்க்கையும்..
நகர்ந்து கொண்டு தானிருக்கின்றன…
ஒரு வெற்றுப் பொழுதொடு..!

நதிக்கு இரு கரைகள்..
கவிதையும் இளமையும்..
அரங்கேறிய கரையில்
களமேறி கனி கொய்து
மலர்ந்ததொரு பூவாய்
மறுகரை வந்து சேர்ந்தாள்.!

இலக்கியமில்லா
இல்லற இரவுகள்…
காதலும் கவியும்
பொய்யெனக் கருதும்
அவளின் புது உறவுகள்..!


படித்தவை.. படித்து
ரசித்து எழுதியவை
அந்தோ..!
வீட்டு பரண் மேலே
ஆழ்ந்த உறக்கத்தில்..

உறங்கா பொழுதுகளிலோ
அவளொரு..
அழகான கவிதையாய்..
அவள் தம் கணவருக்கு..!
ஆம்..!
எழுதிய கவிதைகளின்
எழுத்தாய் இருப்பவள்
அவளே..!

எழுதியவர் : மதுமாலா (30-Jan-13, 8:54 pm)
சேர்த்தது : madhumala
Tanglish : aval payanam
பார்வை : 87

மேலே