காதல்

கையோடு கை சேர்த்து
கழித்த நிமிடங்கள்…
இமைப் பொழுதும்
விழியாலே தழுவிய
பல கணங்கள்..
எனக்குள் நீயும்..
உனக்குள் நானும்..
எப்போதும் இருக்கிறோம்..
என்றுணர்ந்த தருணங்கள்…
இனி என்று வருமோ?
அன்பே..!
இது தொட்டு விடும் தூரம் தான்..!
ஆனால்..
தொட முடியாததொரு …
தண்டவாளக் காதல்..!

எழுதியவர் : மதுமாலா (30-Jan-13, 8:53 pm)
Tanglish : kaadhal
பார்வை : 143

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே