விடியலை ஒளித்துவை.

இரவுக்குத் துணையாக
ஏங்கியே தவிக்கிறேன்
பிரிந்தலையும் பெண்ணிலவே
பிடித்துவா கண்ணாலனை.

பனி நனையும் இரவேநீ
பழகயாரைத் தேடுகிறாய்?
வேணடாமந்த விளையாட்டு
விடியலை ஒளித்து வை.

எரியுங் கொடுஞ் சூரியனே
இனியும்நீ வரவேண்டாம்
பிரிவா லெரியுமென்னை
பின்னும்நீ சுடவேண்டாம்.

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா.. (1-Feb-13, 11:48 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 114

மேலே