என் நிழலாவது சிரிக்கட்டும் ....

உனக்கும் எனக்கும் அப்படி என்ன ....?
நீயும் நானும்
சிரித்தும் உணர்ந்தும்
பழகிய காதல்
பழையதாகிப் போனதோ???

நம் அனைத்து உரையாடல்களின்
முற்றுப் புள்ளிகளும்
சண்டைகளாய் ...?

நம் குழந்தையின் சிரிப்பில் கூட
உன்னையும் என்னையும்
கண்டுகொள்ள முடியவில்லை
என்னால் ....!

உனக்கும் எனக்குமுள்ள
தூரம் அதிகமானதோ ?

நான் நொந்து இளைத்து
மூச்சுவிடும்
தருணத்தில் சொல்வாயா
நான் உன்னை காதலிக்கிறேன் என ?
இல்லை
கொல்வாயா ???

எனக்கு இரண்டும்
ஒன்றுதான் ...!
-எபி .

எழுதியவர் : எபி . (2-Feb-13, 2:05 am)
பார்வை : 220

மேலே