" மழலையின் வானம் "
"குடையே"! என்று நினைத்தேன்
கொட்டுகிறாயே
மழையை
"ஓ" நிழற்குடை
தானோ ? என்று
வினவினேன் வீசுகிறாயே
கனல் வெயிலை
மழையும் தீண்ட
வெயிலும் கனக்க
அப்போ
நீ என்ன குடை?
என்று வினவினேன்
நான் குடையல்ல
"குடை மாதிரி "
என்று சிரித்தாய்
என் விழி மறைத்த வானமே!