உதவி

நீதியின் பாற்பட் டொழுகாது
நண்பனிற்காய்
நியாயம் எதுவுமின்றி
சரம் தூக்கி கொடுக்குக் கட்டி
நிற்றலும்
நண்பனின் மகனிற்காய்
திறமை யிலினும் சிபார்சு
செய்தலும்
ஏழ்மை நிலையில் வாடும்
சகோதரர்க்காய்
தவறிய வழியில்
பொருள்
சேர்த்து துன்பம் தீர்த்தலும்
இட்டமுளோர்க்கு
நயம் பயக்குமெனக் கருதி
இன்னொருவர் கையொப்பம்
இடுதலும்
உறவிற்காய்
கொலையும் செய்யத்
துணிதலும்
சட்டம் தன்னை மீறி
உறவினிற்காய்
இட்டமுடன் எதையும்
செய்தலும்
உற்றவர்க்காய்
பொய்யாய்
சாட்சியம் அளித்தலும்
உதவியாய் இன்று மனிதர்
உவப்புடன் ஏற்பர்
உதவியின் பாற்பட் டொழுகலே
சமூக மனிதனின்
கடமை எனக் கொளின்
தவறிய வழி பெறு உதவியும்
நிறைவென ஏற்றிடில்
நீதியும் நிலைத்திடுமோ?

எழுதியவர் : அழ.பகீரதன் (4-Feb-13, 6:43 am)
சேர்த்தது : அழ.பகீரதன்
பார்வை : 235

மேலே