நட்பு

* முகம் தெரியாமல்
முகவரி புரியாமல்,
இணையத்தில்
நட்பாய் இணைந்தோம்...

* சில உரையாடல்களில்
சிரிக்க வைத்தாய்...
சில உரையாடல்களில்
சிந்திக்க வைத்தாய்..

* பகலிரவு புரியாமல்,
பசித்தூக்கம் அறியாமல்,,
உன் பேச்சால்
என் உலகம் மறக்கவைத்தாய்..

* நட்பாய் அறிமுகமாகி,
நாளடைவில்
நட்பின் முகவுரையை
ஏற்க மறுத்தாய்...
* வளம் தேடும் இடத்தில் இருந்து
என் நலம் நாடினாய்...
கண்ணுறக்கம் தான் கெடுத்து
உரையாடினாய்...

* இனிக்க இனிக்க பேசி
என் இரவை
இனிதாக்கினாய்...
* இது காதலா?, நட்பா?
என்று விளையாட்டாய்
கேட்டதற்கு
என் நட்பைக் கனவாக்கி,
என் நாட்களை நரகமாக்கி
ஓடி மறைந்தாய்...
* உறைமேல் இட்ட விலாசத்திற்க்கே
சரியாய் போய் சேராத அன்பு...
எப்படி உன்னிடம் கிடைக்கும்
என்று எதிர்பார்த்தேன்...

* மழை விட்டுச் செல்லும்,
ஈரக்காற்றாய்,
உன் இனிமையான பேச்சு
அடிமனதில் இன்னும்
தூரலாய் .இருக்குதடி.

* இருப்பது இருக்கட்டும்
என் தோழியே ...
தேனொழுக பேசி,
கொட்டும் தேளென
நீ மாறியதன் நோக்கம்?....

* உன் அன்பின் வெளிப்பாடு
வெறும் தோற்றம் சார்ந்ததா?...
புரியவில்லை...
அன்பைத் தாங்கி நிற்கும்
நம் எல்லை கோட்டில்,
பாதுகாப்புக்கு நிற்பது
நம் நட்பு..
புரியவில்லையா?....
உனக்கு...

* எல்லைத்தாண்டும் பயங்கரவாதம்
என்னில் இருக்காது...
ஆனாலும் என் தோழியே ,
நீ விட்டுச் சென்ற
வார்த்தைகளில்,
எனைக் கொத்திச்செல்லும்
உன் அன்பு
கானலாய் இருந்தாலும்,
கனவிலாவது தொடரட்டும்...
ஆம் தோழி
கனவிலாவது நம்
நட்பு தொடரட்டும்...

* முகம் தெரியாமல்
முகவரி புரியாமல்,
இணையத்தில்
இணைந்தோம்...

எழுதியவர் : raja1987 (4-Feb-13, 6:23 pm)
சேர்த்தது : raja1987
Tanglish : natpu
பார்வை : 319

மேலே