தமிழனுக்கு

சாவதும் வாழ்வதும்
சாத்தியம் உலகிலே
தோழமை கிடைப்பவர்
கையில் உண்டு

வீழ்வதும் எழுவதும்
சாத்தியம் உலகிலே
தோல்வியை உதைப்பவன்
கையில் உண்டு

மூழ்கிய பின்னரும்
எழுந்தவன் யாரடா?
தாழ்மையாய் பேசிடும்
ஏழ்மை நெஞ்சம்

வெட்டியா போதிலும்
துளிர்விடும் மரங்களோ
வீழ்ச்சியின் பொருள்களோ
முடிவு அல்ல தமிழா....
புது எழுச்சியென்று சொல்

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (5-Feb-13, 1:59 pm)
பார்வை : 131

மேலே