பொன்மொழிகள் பக்கம் -2
1)எண்ணங்கள் மனதிலிருந்தே தோன்றுகின்றன. மனமே முதன்மையானது. மனமே அவைகளை வழி நடத்துகிறது. ஒருவன் தூய எண்ணங்களோடு பேசினாலும், செயற்பட்டாலும் அவற்றினால் உண்டாகும் நன்மைகள், எப்போதும் நீங்காத நிழல் போன்று அவனைப் பின் தொடரும்.
2)பிறருடைய குற்றத்தை எளிதில் காண முடிகிறது. ஆனால், தன்னுடைய குற்றத்தைக் காண்பது கடினமாக இருக்கிறது. பிறருடைய குற்றங்களை உமியைத் தூற்றுவது போன்று தூற்றுகிறவர், மிருகங்களின் தோலைக் கொண்டு தன்னை மறைத்துக் கொள்ளும்
வேட்டைக்காரனைப் போலத் தன் சொந்தக் குற்றத்தை மறைத்துக் கொள்கிறார். எப்போதும் பிறருடைய குற்றத்தையே தேடிக் கொண்டிருப்பவர்கள் எளிதில் கோபத்தின் வசம் ஆட்படுகிறார்கள். தங்களுடைய குற்றங்களை அழிக்க முடியாத அளவுக்கு வளர விட்டு விடுகிறார்கள்.