விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்)

நேற்று இரவுதான் ஹிந்தி பதிப்பில் விஸ்வரூபம் படம் பார்த்தேன்.எங்கோ ஆரம்பித்து எங்கே முடிந்தது.என்பதை படத்தை எடுத்த கமல்தான் விளக்க வேண்டும்.
முஸ்ஸிலிம் சிறிய தலைவர்கள் (பெரிய தலைவர்கள் ஆவதற்கு) தமிழ் எனும் மொழியை வைத்தே வளர்ந்த தலைவர்களை போல் இவ்வளவு கடுமையாக
எதிர்த்திருக்க தேவையேயில்லை.இந்த படத்தில் கூர்ந்து கவனித்தால் ஒரு குறிப்பிட்ட மதத்தை(இனம்) சார்ந்தவன் தன் மதத்தை (இனம்) சார்ந்தவனின் அறியாமையையும், வன்முறையையும் எதிர்த்துப் போராடுகிறான்.தன் சமூகத்தில் அறியாமையால் அறிவாளியாக ஆக்கப்பட வேண்டியவன் வன்முறையலானாக ஆக்கபடுகிறர்களே என்ற ஆதங்கம்தான் கதையின் கருவே.இதுதான் ஒன்றும் தவறல்லவே என்பது என் வாதம் (அரசியல்வாதிகள் )அவர்கள் சொல்லுவது போலும் இல்லை படம், எதிர்க்கமால் இருந்திருந்தால் படம் ஒரு பத்து நாளில் வந்த வழியே திரும்பி இருக்கும் ஆனால்,தேவையேயில்லாமல் .எதிர்ப்பு தெரிவித்து அதற்க்கு விளம்பரம் ஏற்படுத்தி விட்டனர்..பொதுவாகவே அமெரிக்கர்களை பற்றிதான் இப்படத்தில் தரக் குறைவாக விமர்சித்து உள்ளனர்.நிஜத்தில் அமெரிக்கர்கள்தான் எதிர்க்க வேண்டிய படம். ஏனெனில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவரின் பொம்மை உருவத்தை சுடுவது போன்றும்.அவர்களை அழிக்க வேண்டும் என்ற காட்சியமைப்புகள் சில இடத்தில வருகிறது.சிந்திக்க வேண்டியது அமெரிக்கர்கள்தான் மேலும் ஒரு காட்சியில் பிரமாணர்களின் ஆச்சாரத்தை கேலி செய்துள்ளனர்.அவர்கள்தான் எதிர்க்க வேண்டும்.இன்னொரு தகவல்,தமிழ் நாட்டில் வெளியிடாமலே இது வரை இதன் வருமானம் மட்டும் 120 கோடியை தாண்டி விட்டதாக தகவல் ஆனால்,இந்தப் படம் பெற்ற விளம்பரம் போல் எந்தப் படமும் இது வரை பெற்றதில்லை என்று தான் கூற வேண்டும்.அந்த எதிர் பார்ப்பில்தான், நான் கூட அந்த படத்தை பார்க்க வேண்டி வந்தது.என்ன செய்தும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காதா இன்னும் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருக்கின்றனர்.அவர்களின் கலையும் வாழ்வும் சொல்லபடாத பாடப்பாடாத,கேட்கபடாத,இசையாகவே முடிந்து விடுகிறது.பிரபல நடிகர்களுக்கு ஆயிரகணக்கான வாய்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
அதில்தான் இவ்வளவு விளம்பரம் அழது ஆர்ப்பாட்டம் வேறு நான் வேறு ஊருக்கு போயிடுவேன்.என்று சின்ன குழந்தைகள் போல் மிரட்டல் வேறு இதை கேட்டு நம் மக்கள் (சினிமா அடிமைகள்) பணத்தை செக் ஆகவும்,dd யாகவும் வாரி வழங்கி விட்டனர் அடிமைகள்.கண்முன்னே சாக கிடந்தாலும் உதவ மனம் வராத,பெற்றவர்களுக்கு சோறு போடாத நாம், ஒரு சினிமாகாரனுக்கு வீடு ஏலத்தில் வந்து விட வரகூடாது என்பதில் நம் மக்களுக்கு அக்கறைதான் என்ன? இந்த அக்கறை தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் ரத்த புற்று நோயாளிகளுக்கு பண உதவி கூட செய்ய வேண்டாம் ரத்த தானம் செய்யலாம்.இந்த மாதிரி ஏதேனும் உபயோகமாக செய்தால் பரவாஇல்லை ஒரு வியாபாரிக்கு (கமல்)கடன் கட்ட மக்கள் தயாரானார்கள் பாருங்கள் அருமை .
இது வரலாற்றில் வரும் தலை முறைக்கு என்னதான் சொல்ல போகிறதோ???????

இந்த கட்டுரை கமல் ரசிகர்களுக்கு புண்படுத்தும் விதமாக கூட இருந்து இருக்கலாம்.மன்னிக்கவும் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்
நன்றிகள்
அன்புடன்
த.நந்தகோபால்

எழுதியவர் : த.நந்தகோபால் (6-Feb-13, 8:55 pm)
பார்வை : 229

மேலே