பிழைக் கிறுக்கல்கள்,,,,

பிழைக் கிறுக்கல்கள்,,,,

உணர்வுக்கூட்டில்
உதிரிய மயிலிறகு
என் கவிதைகள்

இராத்திரி வெளிச்சமில்லா
ஷேக்ஷ்பியர் காவிய நாடகமேடை,,
என் கிறுக்கல்கள் ஒளிந்துள்ள
வெத்துக் காகிதங்கள்

ஆந்தை முளிப்பின்
அம்மானுஷ்ய அலறல் ,,
அவையம் நடுங்கும்
அதிநிர்வேத உலகம்
அங்கேயும் இருவர் ,,,
அதிலேயும் காரணமில்லா ஊடல்,,,

அதிர்வுகளில்லா
அசையியந்திரம்
அரைமனிதனின்
அறியாமை ஆசைகள்
அறியவில்லை
அரங்கேறுமாவென

துளைகளிருந்தும் நீரில்லா
அடைப்புக் குழாய்
மனிதத் தொண்டைக்குழல்கள்,,,

முட்டிக்கொண்டு வரும்
வார்த்தைக் காற்றுகள்
ஆங்காங்கே அடைப்படுகின்றன,,,

இறப்புக் காவியங்களுக்கு
மறதிக் கவிதைகளில்லா
மரபுக்காதலின்
இலக்கணமறியா
புதுக்கவிதைகளிது,,,

மழைத் துளிகள்பட்டு
சிறகடித்துத்துடிக்கும்
சிட்டுக் குருவிகளின்
தவிப்புகளறியா குழந்தைக்
கவியின் பாவ உணர்வுகள்
என் ஆனா ஆவன்னா

திருடப்பட்ட எண்ணக்குவியலின்
எண்ணிக்கையில்லா
நட்சத்திரக் கனவு கூடாரம்,,

கற்பனை வாஞ்சைகளால்,,
உடைந்திட்ட சிற்பங்கள்,,
மனிதமனங்கள்

பிழைக்கவிஞன் இயற்றும்
உவமைகளில்லா உபரிக்கவிதைகள்

மண்செவுற்றின் மேலே
வெறுமனே மூடப்பட்ட
தென்னங்கீற்றின் ஓலைக்கூரைகளாய் ,,,,

அறுபட்டாலும்
அதற்கிடையில்
விடிவெள்ளியாய் நிலாமாகள்

நீரோடை ஆற்றினிலே நனைந்த
காகிதக்கப்பலின் காதல்தூதுகள்

மைய்யழிந்த நிலையிலும்
நிரம்பிய நீர்சுமந்து
பயணிக்கும் அழகு,,,
வார்த்தைகளை கொள்ளையடித்துவிடாதா,,,

எத்தனையோப்பக்கங்களை
கிழித்தெறிந்த பின்னும்
தோன்றாத கவிதைகள்,,

அக்கிழிசல்
குப்பைகளை கண்டதும் ,,,,

அழகாய் துள்ளித்தாவியெழுகிறான்
மனுதுள் மறைந்திருக்கும்
திருட்டுப்புலவனொருவன்,,,

அனுசரன்,,,,

எழுதியவர் : அனுசரன் (7-Feb-13, 4:52 am)
பார்வை : 195

மேலே