கண்ணீர் துளிகள் !!

என் இதய வாசலில்
கண்ணீர் துளிகள்
சிதறும்போது
பார்க்கும் கண்கள்
கூச்சலிடுகின்றன !
காதின் பிடல்களைப்
பூட்டிக் கொண்டு
நாவின் நர்த்தனத்தில்
நாலுவித கதைகளை
மேடையேறி பேசுகின்றன !

தாய்மொழியை
தாரம் வார்த்து கொடுத்து
எதிர் வீட்டு சன்னலில்
நேற்று பிறந்த
மொழி குழந்தையைத்
தாழாட்டி சீராட்டுகின்றன !

சத்தம் போட்டால்
சாதனைக் கூட
சாவை நோக்கித்தான் போகும் !

நேற்றையப் பிணக்குகள்
இன்றைய தமிழ்ப்பள்ளியைப்
பிணமாக்க கூடாது !
நாளைய மாந்தர்கள்
மன்னிப்பை மரணத்தில்
வைத்துவிடுவார்கள் !

இன்னும் என்ன
தயக்கம்....!
உங்கள் பாதங்களிடம்
சொல்லுங்கள்
நான் தமிழ்ப்பள்ளி
செல்கிறேன் என்று !!!




தமிழ்தாசன் எம்.பி.எஸ்.கே
கோலசிலாங்கூர். மலேசியா

எழுதியவர் : தமிழ்தாசன் எம்.பி.எஸ்.கே க (8-Feb-13, 8:29 am)
சேர்த்தது : thamilthasan MPSK
பார்வை : 115

மேலே