சோகம் பொங்கிடும் இதயம்

ஒய்யாரமாய் நிற்பதால் நான்
ஒருவனாய் வாழ்ந்திட இல்லை !
இறந்த உயிர்களின் மேலே
இரக்கமின்றி நிற்கவில்லை !
மடிந்தவர்களை நினைந்து
இடிந்துப் போய் உள்ளேன் !
இருந்திடும் நேரமோ சிறிது
இறப்பும் என்னை தேடுது !
சோகம் இதயத்தை வாட்டுது
சோறாக காலமும் நெருங்குது !
விடியல் வரும் வேளையை
விழிகள் இருக்காது கண்டிட !
இறுதியாய் உலகத்தை காண்கிறேன்
இதுவரை வாழ்ந்ததை நினைத்திட்டு !
பழனி குமார்