அதிசயமாய்...

இதயம் எங்கென எவர்க்கும் சொல்லாள்
ஏதோ நினைவில் எங்கும் செல்வாள்,
உதய நிலவாய் அழகில் ஒளிர்வாள்
ஊமை விழிகளால் இதயம் துளைப்பாள்,
பதியம் வைத்தேன் காதல் கன்றை
பார்த்து வருகிறேன் வளரும் என்றே,
அதிசயம் இன்றவள் பார்த்து விட்டாள்
ஆயிரம் சொர்க்கம் சேர்த்தே விட்டாள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Feb-13, 7:29 am)
பார்வை : 93

மேலே