மரணமாகி..

என் தொலைவுக்கான நாளுக்காய் தான்
நிமிடங்களில் தொங்கிக் கொண்டிருக்கிறேன்
தொலைந்து போகும் எண்ணங்களில்தான்
முடிக்கப்படுகிறது இரவுகள்.........
இத்தனையும் நிராகரிக்கப்பட்டு
விடியல்களை எதிர் கொள்ளும் போது
கழுவேற்றப்படுகிறது
என் ஆன்மா..........