பாசம்
ஆதியும் அந்தமும் உன்னுள்தான்
கண்ணீரும் செந்நீரும் உனக்குத்தான் !
எங்கு கற்றாய் காயப்படுத்தும்
கலைகளையும் வித்தைகளும் கலங்கும்
நெஞ்சமும் உறையும் இரத்தமும்
உளரும் உதடுகளும் வயிறு
வலிக்க சிரிப்பதும் உனக்கே
சமர்ப்பணம்! வந்து போகும்
விருந்தினராய் சுற்றி வாழும்
உறவினராய் சுகம்தரும் மெத்தையாய்
வாட்டி வதைக்கும் பசியாய் என்னுள்
உறங்கும் தோழி நீ எனக்கு
மட்டுமே சொந்தமான சொத்து !