வாழும்வரை வாழ்க

தப்பைத் தப்பாகமல் செய்.
தவறைத் தவறாகாது செய்.
குற்றத்தைக் குற்றமாகது செய்.
வேண்டாமெனச் சொல்ல வில்லை..
எதைச் செய்தும் தப்புவாயா?.
எப்படியும் பிடித்திடுவர்.
அப்புறம் ஏன் அதைச் செய்வீர்?
அதனால்தான் நன்மை என்ன?

இன்று நீ கொலை செய்கிறாய்.
நாளை நீயே கொலை யாவாய்.
எத்தனை நாட்கள் வாழ்கிறாய்?
எமனும் உன்னை விடுவானா?
எதைத்தான் சாதித்தாயோ?
இப்புவிதான் நிலையாகுமோ ?
வாழ்வதே கொஞ்ச நாட்கள்.
வாழும் வரைவாழ்ந்து போ.

தர்மப்படி வாழ்ந்தால் என்ன!
தடைகள் உண்டா சொல்லுங்கள்
கர்மசுத்தி கடைப்பிடித்தால்
கடவுளின் பிள்ளையாவீர்
பிறர்க்கின்னா செய்வதால்
பெருமை என்ன கண்டீரோ!
என்ன இங்கு கொண்டு வந்தீர்?
எதை அங்கு எடுத்துச் செல்வீர்?

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா (8-Feb-13, 11:27 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 94

மேலே