சூழ்நிலை என்பது யாதெனில்

சூழ்நிலை சரியில்லை
என சுணங்காதே

விதைக்கும் போது
சுணங்கி சும்மா கிடந்து
அறுவடைக்கு அருவா
தூக்கி சென்றால்
நெல் கிட்டா புள் தான் கிட்டும்

நீந்த கற்க நினைக்கிறாய்
நீர் அதிகமா இருக்கு
குறையட்டும்,குறையட்டும்
என சூழ்நிலைக்கு காத்திருந்தால்
நீர் வற்றி போன பின்னே
தரையில் அல்லவா நீந்த வேண்டி இருக்கும்

சூழ்நிலை என்பது
தானாக வருவதும் இல்லை
தானாக தவறுவதும் இல்லை

சூழ்நிலை என்பது உருவாக்கப்படுவதே

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (8-Feb-13, 12:24 pm)
சேர்த்தது : a.n.naveen soft
பார்வை : 106

மேலே